11q

குளிர்ந்த நிலையில் இருக்கும் வரையில் மேற்சொன்ன வேதிப்பொருள்கள் பிளாஸ்டிக்கில் எந்தவொரு மாற்றத்தையும் தோற்றுவிக்காது. ஆனால் சூடாகும் போதுதான் வினையாற்றத் தொடங்குகிறது. அவை மனிதருக்கு வினையாய் முடிகிறது.

தண்ணீர் பாட்டில்கள் இல்லாத பயணங்களே இன்று பார்க்கமுடியாது. சாலையோரம் / வீதியோரம்/ இரயில் நிலையங்கள்/பேருந்து நிலையங்கள்/ பூங்காக்கள் என்று பொதுமக்கள் கூடும் இடமெங்கும் இந்த தண்ணீர் பாட்டில்கள் விற்பனை சூடு பறக்கிறது… இல்லையா?
 
ஆம், (தயாரித்ததிலிருந்து விற்பனை நிலையம் சேரும் வரையில் வெய்யிலில்) சூடான இந்த தண்ணீரைக் (பிறகு குளிரவைத்தாலும்) குடிப்பதும், வியாதியை விலைகொடுத்து வாங்குவதும் ஒன்றுதான் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி!
 
தரமான பிளாஸ்டிக் பாட்டில்கள் என்று அறிமுகப்படுத்தினாலும் அது தயாரிக்கப்படுவது என்னவோ பாலிஎத்திலீன் டெரேஃப்தாலேட் எனும் இரசாயனப் பொருள்களைக் கொண்டுதான். இந்த மூலப்பொருள்கள் கலந்த பிளாஸ்டிக் சூடாக்கப்படும்போது ‘ஆன்டிமொனி’ மற்றும் BPA என்றழைக்கப்படும் பிஸ்ஃபினோல் A எனும் வேதிப்பொருள்கள் வெளியாகிறது.
 
குளிர்ந்த நிலையில் இருக்கும் வரையில் மேற்சொன்ன வேதிப்பொருள்கள் பிளாஸ்டிக்கில் எந்தவொரு மாற்றத்தையும் தோற்றுவிக்காது. ஆனால் சூடாகும் போதுதான் வினையாற்றத் தொடங்குகிறது. அவை மனிதருக்கு வினையாய் முடிகிறது.
 
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகளின் நிர்வாகத்துறை சந்தையிலுள்ள பதினாறு கம்பெனிகளின் தண்ணீர் பாட்டில்களை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டு பரிசோதித்தது.
 
அதன் முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தண்ணீர் பாட்டில்கள் சூடான இடங்களில் வைக்கப்பட்டு அதனால் சூடாகும் தண்ணீரில் / குறிப்பாக காரில் தொடர்ந்து வைத்துப் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் இருந்து வெளிவரும் நச்சு வேதிப்பொருள்கள் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதனால் குழந்தைகள் மிகவும் பாதிப்படைவார்கள் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
 
அதே பாட்டில்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் பாதிப்பும் அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முடிந்தவரையில், தண்ணீர் பாட்டில்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டிருக்காது என்று அஞ்சும் இடங்களிலிருந்து வாங்குவதைத் தவிர்த்தல் நலம்.
கார் / பேருந்து போன்ற பயணங்களில் சூடேறும் இடங்களில் தண்ணீர் பாட்டிலை வைக்காமலும், / காருக்குள்ளேயே பாட்டில்களை வைத்திருக்கும் பக்க்கத்தைத் தவிர்த்தலும் நலம்.
குழந்தைகளுக்கு சுடுதண்ணீர் கொடுத்தனுப்புவதற்கு பிளாஸ்டிக் பாட்டில்களைத் தவிர்த்தல் நலம்.
பிளாஸ்டிக் கப் களில் டீ, காபி போன்ற சூடான பானங்களை அருந்துவதைத் தவிர்த்தல் நலம்.
ஒருமுறை வாங்கும் பாட்டில்களை தொடர்ந்து பயன்படுத்தாமல் தவிர்ப்பதும் நலம்.
 
(செய்தி ஆதாரம்: உணவு மற்றும் விவசாய ஆராய்ச்சிப் பிரிவு – ஃப்ளோரிடா பல்கலைக்கழகம்.)
– Rafeeq Sulaiman.
Advertisements