௧௧1

சென்ற வருடம் சென்னையில் இருந்தபோது ‘தோழன்’ அமைப்பின் சார்பாக ‘விபத்தில்லா தேசம்’ எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது இங்கு (துபாயில்) பின்பற்றப்படும் சாலைவிதிகள், மீறினால் உண்டாகும் விளைவுகள், அபராதங்கள் இன்னும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு உள்ள கடுமையான தேர்வுமுறைகள். சிறிய தவறுக்காகக்கூட FAIL ஆகும் நிலை இவையெல்லாம் சொன்னவுடன் ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

பிறகு பேசிய நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊரில் சோதனைமுறையில் ‘ஸ்மார்ட் சிக்னல்’ எனும் திட்டத்தை செயல்படுத்த விரும்பி, உரிய அதிகாரிகளிடம் அனுமதி கேட்டபோது, ” இது சிறிய நகரம். இங்கு இது தேவையில்லை.” என்று சொல்லி அனுமதி மறுக்கப்பட்டதாகச் சொன்னார்.

சிறு நகரங்களில் இருப்பவர்கள்தானே சென்னை போன்ற பெருநகரங்களில் குடியேறுகிறார்கள்? அங்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாத நிலையில் அவர்கள் புலம்பெயர்ந்து வசிக்கும் பெருநகரங்களில் என்ன பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்? இங்கும் கூட அதற்கான முயற்சிகள் இல்லாத நிலையில் எப்படி அந்த மாற்றம் வந்துவிடப்போகிறது?என்பது போன்ற ஆதங்ககளைக் கொட்டிக்கொண்டிருந்தோம்.

சற்று ஆறுதலாக, குறைந்தபட்சம் நம் நடப்பிலிருக்கும் போக்குவரத்துக் காவல் அதிகாரி அவர்கள்,தமிழகத்திலுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு சாலைவிதிகள் பற்றிய வகுப்புகளை எடுத்து வருகிறார்.

நேற்று இங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வாய்ப்பு வர, அங்கு முதலில் கண்ணில்பட்டது இந்த சாலை பற்றியதுதான். அதுவும் எந்த வகுப்பிற்குத் தெரியுமா? KG வகுப்பு மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்லும் வழித்தடம்தான் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

சாலைவிதிகள் எந்த வயதில் விதைக்கப்படுகிறதுஎன்று பாருங்கள்?

நமக்கு இவையெல்லாம் சொல்லித்தர RTOக்களும், அதிகாரிகளும்தான் வாய்க்கப்பெறவில்லை. குறைந்தபட்சம் நம் ஆசிரியர்களாவது சிரத்தை எடுக்கலாமே! விபத்தில்லா தேசம் உருவாக்கலாமே!

-Rafeeq Sulaiman

Advertisements