aa
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனக்குப் பிறக்கவிருக்கும் மகளை வரும் கோடையில் வரவேற்கவுள்ளார்.
இதற்காக அலுவலகப் பணிகளிலிருந்து இரண்டு மாதங்களுக்கு அவர் விடுப்பில் செல்லவுள்ளார்.புதிதாய் பிறக்கும் குழந்தையுடன் ஆரம்ப காலத்தில் செலவழிக்கும் உன்னதமான நேரங்கள், அவர்களின் பிற்கால உயர்வுக்கு பெரிதும் உதவும் என்றும், குடும்பப் பிணைப்பிற்கு உதவும் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதை மேற்கோளிட்ட மார்க், தனது நிறுவனத்தில் பணியிலிருப்பவர்களுக்கும் (பெண்களுக்கு) 4 மாத பேறுகால விடுப்பு, அதேபோல் 4 மாதங்கள் ஆண்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு என்றும் வழங்கப்படுவதாகவும் செய்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அந்த விடுப்பிற்கான நாள்களை ஆண்டு முழுவதும் உபயோகித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மைக்ரோஸாப்ட் ஆண்களுக்கு 12 வாரங்களும், பெண்களுக்கு 20 வாரங்களும் விடுப்பு கொடுக்கிறது.

அடோப் ஆறு மாதங்களும், நெட்பிக்ஸ் (குழந்தை பிறந்த ஆண்டில்) எல்லையற்ற விடுப்பும் பேறுகாலத்தில் வழங்குகிறது.

எல்லா நிறுவனங்களும் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?
“எங்கள் நாட்டின் அடுத்த தலைமுறைக்கான அறிவார்ந்த சொத்தினை உருவாக்குகிறோம், ஆகவே இது இழப்பில்லை, அறிவு மூலதனம்” என்கிறார்கள்.

நாம்  🙂

Advertisements